பலியான இரு உயிர்கள்! சிக்கிய சிறுத்தை! முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு!
nilagiri leopard attack CM Stalin announce
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பந்தலூர் பகுதியில் 3 வயது குழந்தையை சிறுத்தை ஒன்று கடித்து கொலை செய்த சென்று பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த இரண்டு மாதமாக இந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்த அந்த சிறுத்தையை சுட்டு பிடிக்க, இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சிறுத்தையைப் பிடிக்க கும்கி யானை உதவி உடன் இன்று சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அப்போது தயார் நிலையில் இருந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "மேங்கோ ரேஞ்ச் பகுதியை சேர்ந்த சரிதா (வயது 29), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி நான்சி ஆகியோர் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
விலைமதிப்பில்லாத இந்த உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த செய்தி குறிப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
nilagiri leopard attack CM Stalin announce