நீலகிரி யாஷிகா கொலை வழக்கு! கருத்து சொன்ன பாஜக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய பெண் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த, விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் ஆஷிகா பர்வீன் என்ற பெண், அவரின் கணவர், மாமியாரால் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவத்தை பொறுத்தவரை மாமியார் பலருடன் தகாத உறவில் இருந்ததாகவும் (வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது), இதனை அறிந்த மருமகள் ஆஷிகாவை சாப்பிட்தில் விஷம் கலந்து கொடுத்து குடும்பமே கொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு, அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 52) விருதுநகர் மாவட்ட பாஜக பார்வையாளர் எந்த பதவியில் இருந்து வருகிறார்.

வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில் நீலகிரி யாஷிகா கொலை சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கருத்து, தவறான செய்தி என்று, அவர் மீது நீலகிரி மாவட்ட போலீஸார் வழக்கு பதிந்து இன்று அவரை கைதும் செய்துள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தவறான செய்தி பரப்புவோர் மீது நீலகிரி மாவட்ட போலீஸார் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiri Murder case Viruthunagar BJP Vetrivel Arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->