திடீரென்று தீ பிடித்த இ-பைக் - பறிபோன 9 மாதக் குழந்தையின் உயிர்.!
nine month baby died for electric bike blast in chennai maduraivayal
சென்னை அருகே மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவர் தனது வீட்டில் நேற்று அவரது இ- பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் கவுதம், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குழந்தையின் தந்தை கவுதமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இ-பைக் தீப்பிடித்து ஒன்பது மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
nine month baby died for electric bike blast in chennai maduraivayal