வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் - என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இது தொடர்பாக கிடைத்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, விரைவில் என்.எல்.சி., நிர்வாகத்துடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

அதன் பின்னர் அவர்கள், செய்தியாளர்களை சந்தித்தபோது பேசுகையில், "நாளை வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளோம். குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிடவும் உள்ளோம். இதனால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC employees decided stop work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->