அந்த வீடியோவை பார்த்து, கண்ணீர் விட்டு அழுதேன் - உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை! - Seithipunal
Seithipunal


பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் கால்வாய் தோன்றும் பணியை பார்க்கும்போது, அழுகை வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். 

விளைந்த பயிர் நிலத்தில், புல்டோசரை இறக்கி கால்வாய் வெட்டும் வீடியோவை பார்த்து கண்ணீருடன் அழுதேன் என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? என்றும் என்எல்சி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, கண்டனத்தையும் பதிவு செய்தார்.

நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நாளை உணவு பஞ்சம் வரும், அதை நாம் பார்த்தான் போகிறோம். அப்போது இந்த நிலக்கரி பயன்படாது என்றும் நீதிபதி தண்டபாணி தனது கருத்தினை பதிவு செய்தார்.

மேலும், என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் என் கருத்து என்றும்  நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். 

அப்போது, நிலத்தின் மதிப்பை விட மூணு மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தற்போது சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு எதிர்விப்பதாக என்எல்சி நிர்வாகம் பதிலளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Issue Chennai HC Condemn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->