திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் உண்டா? - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!
no election for thirukovilur constituency tamilnadu election commission cheif officer info
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி உடனடியாக மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. மாவட்டங்களில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வீடு வீடாக சென்று படிவம் விநியோகிக்கப்படும். தமிழகத்துக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு. கடந்த முறை தமிழகத்துக்கு இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது.
விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏவாக தொடர்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதி தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. அதை உடனே நீக்கிவிட்டோம்.
டீப் ஃபேக் வைத்து தவறுதலாக பிரச்சாரம் செய்தால் அதனை தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கலாம். சட்டப்படி அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கண்காணிப்படும். சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் நடந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
no election for thirukovilur constituency tamilnadu election commission cheif officer info