கொல்லைப்புறமாக அரசு வேலை வழங்குவதால் படித்த இளைஞருக்கு வேலை இல்லை.! - Seithipunal
Seithipunal


சரியான ஒரு தேர்வாணையத்தை புதுச்சேரி அரசு அமைக்க தெரியவில்லை. இதனால் படித்த இளைஞருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் நிறுவனர்  ரகு என்கின்ற ரகுநாதன் கூறியுள்ளார்.

மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் கொல்லைப்புற பணியாளருக்கு அனைவருக்குமே வேலை என்று அறிவித்துள்ளார். இனிமேல் யாரும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதீர்கள். அனைவருமே கொள்ளை பூர்வமாக பணி செய்ய தயாராகுங்கள் ஏனென்றால் புதுச்சேரி அரசு எப்போதுமே சட்டத்தை மதிக்காது சட்டத்திற்கு புறம்பாக என்னென்ன குறுக்கு வழி இருக்கிறதோ அந்த வழி சரியான முறையில் புதுச்சேரி அரசு கையாளும் அதிகாரிகளை தவறு செய்து விட்டு சிறைக்கும் அனுப்பும் நமது புதுச்சேரி அரசு. 

படித்த இளைஞருக்கு சரியான ஒரு தேர்வாணையத்தை புதுச்சேரி அரசு அமைக்க தெரியவில்லை. இதனால் பல கொள்ளை போற பணியாளர்கள் கொள்ளை புறமாகவே வருகிறார்கள். படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் கூலி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

ஒன்று பணம் கொடுக்க வேண்டும் அல்லது ஆட்சியாளருக்கு கைக்கூலியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் புதுச்சேரியில் அரசு வேலை வழங்கப்படும். புதுச்சேரியில் மட்டும் பணத்திற்கும் ஆட்சியாளருக்கு அடி பணிந்தால் மட்டுமே சட்டம் அவருக்கு தகுந்தா போல் வளைந்து கொடுக்கும் . நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு எப்பொழுதும் மதிக்காது என்பதை தெள்ளம் தெளிவாகத் தெரிகிறது. 

கொல்லைப்புற பணியாளர்களை தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். என்று புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் நிறுவனர்  ரகு என்கின்ற ரகுநாதன் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No job for educated youth as govt offers backyard job


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->