ரம்ஜான் அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை; ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்; எங்கு தெரியுமா?
No holiday for banks on Ramzan Reserve Bank instructions
இந்தியாவில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ரம்ஜானுக்கு அரசு விடுமுறை வழங்கப்படும். இதன்படி, அனைத்து வங்கிகளுக்கும் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இமாசல பிரதேசம் மற்றும் மிசொரம் ஆகிய மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது ரம்ஜான் பண்டிகை தினமான நாளை, வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாளையுடன் 2024-25-ஆம் நிதி ஆண்டு முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 01 ஆம் தேதி 2025-26 புதிய நிதி ஆண்டு தொடங்குகிறது. இதனால், 2024-25 நிதி ஆண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியது அவசியம் உள்ளது. இதன்காரணமாக நாளை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
No holiday for banks on Ramzan Reserve Bank instructions