சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் நாளையுடன் முடிவடைய உள்ளதால், வருகிற 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, விடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின்போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "28-ந்தேதி முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. 

பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no special class in quarterly exam holidays in schools education department order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->