தமிழகத்தில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் என்று எதுவும் இல்லை...!!! - தமிழ்நாடு அரசு
no such thing chemically treated watermelons Tamil Nadu government
சில நாட்களுக்கு முன்பு, தர்பூசணியில் ராசாயனம் இருப்பதாகவும் அதனை கவனித்து உட்கொள்ளவேண்டும் என்ற விவகாரம் குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு, இந்த மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் மனு மீதான விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த தொடர் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
English Summary
no such thing chemically treated watermelons Tamil Nadu government