வடகிழக்கு பருவமழையில் அதிகளவு காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 29-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல பகுதிகளில் பரவலாக கன மழை மற்றும் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து, வருகிற 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. இதையடுத்து, வருகிற 10-ந்தேதி வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். 

இதைத்தொடர்ந்து, வருகிற 15-ந்தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் என்பதால், தமிழகம் முழுவதும் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மழை பெய்யக் கூடும் . அதிலும் குறிப்பாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும். 

அதன் பின்னர் இந்த மாதம் 4-வது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவாகி, அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதனால், தமிழகத்தில் வரும் 27-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, 28, 29, 30 உள்ளிட்ட தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாக உள்ளதால், டிசம்பர் 20-ந்தேதி வரை மழை பெய்யும். பின்பு டிசம்பர் மாதம் 25-ந் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாக இருக்கிறது.

இந்தக் காற்றழுத்தம் சிறிய புயலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த புயல் கடல் பகுதியில் உருவாகும் நீராவியை மட்டும் கொண்டு வந்து மழையாக பெய்யும். தொடர்ந்து, டிசம்பர் மாத இறுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகவும் உள்ளது. 

அந்தக் காற்றழுத்தத்தினால், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு காற்றழுத்தம் உருவாக உள்ளதனால், தென் மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், இந்த வடகிழக்கு பருவமழை காலம் அதிக அளவில் மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north east rain air pressure build in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->