பரமக்குடி: 34 மாணவிகள், 8 ஆசிரியர்கள் அளித்த புகார் - சஸ்பெண்ட் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அதிரடி! - Seithipunal
Seithipunal


பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேசன், அநாகரிகமாக நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்

இந்த பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் வெங்கடேசன் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கல்வி நிர்வாக குழுவின் நடவடிக்கையை எதிர்த்த ஆசிரியர் வெங்கடேசன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின் போது, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஆசிரியர் வெங்கடேசன் மீது 34 மாணவிகள் மற்றும் எட்டு ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இப்புகார்களின் அடிப்படையில் முழுமையான விசாரணை செய்யப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramakudi Suspended Teacher case Judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->