CM ஸ்டாலினின் டார்கெட் புரிகிறது.. ஆனால் முடிவு 2026-ல் தெரியும் - வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!
bjp mla Vanathi say about CM Stalin DMK Kovai
கோவையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் தெரிவிக்கையில், "தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமான முறையில் நூலகம் கோவை தெற்கு தொகுதியில் அமைக்கப்படுகிறது. நூலகம் பல தலைமுறைகளுக்கான திட்டமாகும். அதற்காக முதல்வருக்கு நன்றி.
வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் துணை நிற்க வேண்டும். கோவையை கவர்ந்துவிட வேண்டும் என முதல்வர் செயல்படுகிறார். 2026-ல் அதற்கு பதில் கிடைக்கும். கோவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் கொடுக்க வேண்டும்
கோவை தெற்கு தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவினை முதல்வரிடம் அளித்தேன். அதில்,
* அவிநாசி சாலையில் நீலம்பூர் வரை மேம்பாலம் நீட்டிக்கப்பட வேண்டும்.
* தங்க நகை தொழில் சார்ந்த கோரிக்கைகள்.
* விஸ்வகர்மா யோஜனா திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும்.
* சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான தகவல்களை தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.
English Summary
bjp mla Vanathi say about CM Stalin DMK Kovai