#நீலகிரி || ஊட்டியில் நிலச்சரிவு - வடமாநில தொழிலாளர் பலி.!!
North Indian worker died in landslide in Ooty
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4 வடமாநில இளைஞர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை கட்டுமான பணியில் மண் ஆகற்றியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட மண் சரிவில் ரிஸ்வான் மற்றும் ஜாகீர் என்ற இரு வடமாநில தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் ரிஸ்வான் உயிரிழந்த நிலையிலும், ஜாகீர் உயிருடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டுமான உரிமையாளர் மேத்யூஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
North Indian worker died in landslide in Ooty