இன்றுடன் முடிவடையும் வடகிழக்கு பருவமழை.. இன்றைய வானிலை எப்படி?
Northeast monsoon ended today in tamilnadu
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.
இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்றுடன் வடகிழக்கு பருவ மழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
13/01/2023 முதல் 15/01/2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
English Summary
Northeast monsoon ended today in tamilnadu