வடகிழக்கு பருவமழை - முன்னேற்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை,,! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 

மேலும், ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும். இதில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

northest mansoon progress in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->