சாதனை மேல் சாதனை - பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நார்வே செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தது பிரக்ஞானந்தா அபாரமான சாதனை புரிந்துள்ளார்.

மேலும், 5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்தது பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

இந்நிலையில், சாதனை மேல் சாதனை புரிந்துவரும் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா!

மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் 'கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும், பிரக்ஞானந்தா! ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Norway Chess Praggyanandha MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->