பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; புகார் எண் அறிவிப்பு..!
Notification of complaint number to prevent increasing sexual crimes in schools
தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றது.
![](https://img.seithipunal.com/media/CHILE-m37kq.jpg)
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், மற்றும் தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/CHILE AB-scxpu.jpg)
பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் முதல் சிறுமிகள் தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Notification of complaint number to prevent increasing sexual crimes in schools