குஷியில் மாணவர்கள்!!! இனி காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் சாம்பார்...! சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு....
Now Pongal Sambar replace Upma breakfast program New announcement Assembly today
இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.அதில் முக்கியமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக 'பொங்கல், சாம்பார்' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகையை ரூ.61.61 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது மக்களிடையே வரவேற்கும் விதமாக மாறியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு இந்த நற்செய்தி நன்மை பயக்கும் என்று தெரிகிறது.
English Summary
Now Pongal Sambar replace Upma breakfast program New announcement Assembly today