காதலனை தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச் சென்ற நாம் தமிழர் நிர்வாகி..!! திருச்சியில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே சொரியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து பெண்ணின் உறவினர்கள், அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், பெண்ணின் உறவினருமான வழக்கறிஞர் அருணகிரி ஒரு கும்பலுடன் மதுரைக்கு சென்று அவர், காதலன் சந்தோஷை காரில் கடத்தி கொடூரமாக தாக்கி வழியிலேயே இறக்கி விட்டுவிட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

இதில் காயமடைந்த சந்தோஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சந்தோஷிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருணகிரி சாதி ரீதியாக திட்டியதுடன் இருவரையும் தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். இதைப்பதிவு செய்துகொண்ட போலீசார் அருணகிரி மீது வழக்குப்பதிவு செய்ததுடன், அவருடன் சென்ற மேலும் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

மொத்தம் 4 பேரையும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அருணகிரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk excuetive arrest for student attack in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->