கொத்து கொத்தாக விலகும் நாதக நிர்வாகிகள் - நாளைக்கு சீமானுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.!
ntk excuetives joined dmk at tommorrow
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அப்படி விலகும் நபர்கள் சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை; தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் பெரும்பாலும் திமுகவிலேயே இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என்று 3,000 பேர் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ntk excuetives joined dmk at tommorrow