ஸ்ரீ பள்ளி விவகாரம் - நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-23 கல்வி ஆண்டில் மத்திய அரசு சார்பில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் வகையில், மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 பள்ளிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. 

இந்த பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நவோதயா பள்ளிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது.

கல்வியை காவியமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணை போகிறார்?. ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்கும் முடிவை கைவிட்டு சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman condems sri palli issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->