அன்புத்தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் - நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதுடன் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆலோசனை செய்து வந்தார். இந்த மாநாட்டிற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்ததுடன் வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், அதன் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman wishes to tvk leader vijay


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->