மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!
NTK Madurai bala Subramanian hacked to death
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், செல்லூர் வடக்கு தொகுதி துணை செயலாளராக இருந்த பாலசுப்ரமணியனை, இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் திமுக அமைச்சர் பி டி ஆர் வீடு அருகில் நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
மேலும் பாலசுப்ரமணியனை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? அரசியல் ரீதியான கொலையா? அல்லது முன் பகை, குடும்பத் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பாலசுப்ரமணியம் குடும்பத்தினரிடம் முதல் கட்ட விசாரணையை போலீசார் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் மாவட்ட தலைவர், அதிமுக நிர்வாகி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் என அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், தமிழக அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அரசியல் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
NTK Madurai bala Subramanian hacked to death