நர்சிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல குறைவு..கல்லூரிக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டிஸ்!! - Seithipunal
Seithipunal


சேலம் தனியார் நர்சிங் கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடநல குறைவு மருத்துவமனையில் அனுமதி.

சேலம் மாவட்டம் ஆச்சாம்குட்டபட்டி பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அனைத்து மாணவிகளும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட சம்பவம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரிய வந்து, மாணவர்களை காண வந்த பெற்றோர் மாணவர்களின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்துடன் அழுத்தம் கொடுத்து மாணவிகளை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அக்கலூரியின் சமையல் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விடுதியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் நர்சிங் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nursing college canteen food eating student food poison


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->