சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள்? - Seithipunal
Seithipunal


நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 05, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் மூலம் 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றனர். விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து விட்டு, குறிப்பிட்ட காலத்தில் திரும்ப முடியாமல், எட்டு மாதங்களாக அங்கு தவித்து வருகின்றனர்.

இவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. ராக்கெட் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். ஆனால், இந்த ராக்கெட்டில் த்ரஸ்டரில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாகவே இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் இருவரையும் மீட்கும் தொடர் முயற்சிக்கல் யாவும் தோல்வியில் முடிந்துள்ளது. பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ''நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன்'' என டிரம்ப் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் ஜனாதிபதியான பின்னர் சுனிதா வில்லியம்ஸை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்துள்ளன.

இது குறித்து நாசா கூறுகையில், வரும் மார்ச் 12-ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 ராக்கெட் விண்வெளிக்கு செல்ல உள்ளது. அது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டு கொண்டு வரும் என்று கூறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sunita Williams and Butch Wilmore will return to Earth


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->