அனைத்தும் பொய்யாகும்... அ.தி.மு.க எங்கள் வசம் வரும் - பரபரப்பு கிளப்பிய ஓபிஎஸ்.!  - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்ற வருகிறது. 

அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையிலிருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இந்நிலையில் தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதலமைச்சரும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வாக்கு செலுத்தினார். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்த மோடியை மீண்டும் பிரதமராக வரவேண்டும் என பொதுமக்கள் நினைக்கின்றனர். 

ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக வெற்றி பெறுவேன். அ.தி.மு.க உறுதியாக எங்கள் பக்கம் வந்து சேரும். 

வருகின்ற 2026 ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் பொய்யாகும் தேர்தலாக இது அமையும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

O Panneerselvam interviewed after voting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->