வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற கொடூரம் - இதுதான் காரணமா?
officers carried voting machines head in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என்று மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நாளை நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கீழூர், கெடமலை உள்ளிட்ட இரு கிராமங்களில் இருக்கும் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்த மலைப்பகுதியை அடைய சுமார் 7 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், அப்பகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மைகள் உள்ளிட்ட தேர்தலுக்கு உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் வடுகம் அடிவாரத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தங்களின் தலையில் சுமந்து கொண்டு அப்பகுதி வாக்குச்சாவடியை அடைந்துள்ளனர். கடந்த வருடமே இங்கு சாலைகள் அமைப்பதற்கு ரூ.140 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டடு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
officers carried voting machines head in namakkal