அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர்.! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஏரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோபால்(74). இவர் இன்று அதிகாலையில் காலைகடன் கழிப்பதற்கு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் நிலம் அருகில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

இதைப் பார்க்காத கோபால், அறுந்துக்கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த களம்பூர் போலீசார், உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman killed electrocuted in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->