ஒமைக்ரேன் எதிரொலி : ஊரடங்கு தளர்வில் மேலும் சில கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு., நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!
OMICRON ISSUE CM STALIN MEETTING
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பரவளில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 64 பேர் ஒமைக்ரேன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அறிவியல் ஆதாரத்தின்படி டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை மூன்று மடங்கு அதிகம் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை, ஒமைக்ரான் பரவல் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, ஊரடங்கு தளர்வில் மேலும் சில கட்டுப்பாடு விதிக்கலாமா? என்பது குறித்து ஆலாசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
OMICRON ISSUE CM STALIN MEETTING