ஒமைக்ரான் எதிரொலி : தமிழகத்தி பள்ளி, கல்லூரிகளை மூடுங்கள்., முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.! - Seithipunal
Seithipunal


ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"தற்போது ‘ஒமைக்ரான்’ தொற்று பரவும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஒமைக்ரான்’ தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும். குறிப்பாக பார்வையாளர்கள் அதிகம் கூடும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும். 
கோவிட்கேர் மையங்களில் தேவையான ஆக்சிஜன், பாதுகாப்புக் கவசங்கள், மருந்துகளைக் குறுகிய காலத்தில் அதிக அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும்." என்று அந்த கடிதத்தில் செந்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMICRON ISSUE SCHOOL COLLEGE CLOSE REQUEST


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->