ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம்: பேச்சுவார்த்தை நடத்தும் தமிழக அரசு!
Omni buses strike Tamil Nadu government to negotiate
தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் இன்று தமிழக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தவறு எதுவும் செய்யாமல் இயங்கி வந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்த அறிவிப்பை தென் மாநில ஆம்னி பேருந்து சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அந்த வகையில் ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
தென் மாநில ஆம்னி பேருந்து சங்க கூட்டமைப்பு, பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏராளமான பயணிகள் சொந்த ஊரிலிருந்து திரும்ப முன்பு முன்பதிவு செய்துள்ள நிலையில் வேலை நிறுத்தம் அறிவித்ததால் பயணிகள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Omni buses strike Tamil Nadu government to negotiate