ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!...கடை வீதிகளில் அலைமோதும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழிபாட்டிற்கு தேவையான பூ, பழங்கள், பூஜை பொருட்கள்  மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொது மக்கள் கடை வீதிகளில் குவிந்துள்ளனர். இந்த நிலையில், ஆயுதபூஜையையொட்டி தமிழ்நாட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.


அந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை பின்வருமாறு, ஒரு கிலோ மல்லிகை  ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. முல்லை பூ கிலோ ரூ.450, பன்னீர் ரோஸ் ரூ.160, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.250, கனகாம்பரம் ரூ.1,000, சாக்லேட் ரோஸ் ரூ.400, அரளி பூ ரூ.420க்கு விற்பனையாகிறது. இருந்த போதிலும் பொதுமக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.


இதே போல், கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில்,பூக்களின் விலையும் நேற்றை விட இன்று அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.  ஆயுத பூஜையையொட்டி விற்பனைக்காக சுமார் 250 டன் பூக்கள் இங்கு வந்துள்ளது.  மல்லிகை கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.700 ஆகவும், அரளி கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.450 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.700-க்கும், முல்லை - ரூ.600-க்கும், பிச்சி - ரூ.600-க்கும், கனகாம்பரம் - ரூ.800-க்கும், சம்மங்கி - ரூ.300-க்கும், செவ்வந்தி - ரூ.150-க்கும், அரளி - ரூ.700-க்கும், மரிக்கொழுந்து - ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

On the occasion of ayudha pooja the price of flowers has gone up


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->