#Breaking: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசுகின்ற தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். இது பத்து நாட்கள் வண்ண பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகை. 

அந்த வகையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓனம் பண்டிகையில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ள நிறைய மக்கள் செல்லும் காரணத்தால் சமீபத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இத்தகைய நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onam Festivel Leave For Nilgiri district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->