உயிர் பலி வாங்கிய 50 அடி பள்ளம்.!! வேளச்சேரி கோர விபத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.!!
One dead body rescued in Velachery gas bunk sinkhole accident
கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னையில் நிஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளச்சேரியில் எரிவாயு நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட 40 அடி பள்ளத்தில் வெள்ளநீர் புகுந்ததால் அருகில் கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பு குழிக்குள் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 4 பேர் சிக்கிய நிலையில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் தொழிலாளர் நரேஷ் மற்றும் மேற்பார்வையாளர் ஜெயசீலன் ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.
கடந்த 4 நாட்களாக 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய நரேஷ் என்பவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு நபரான ஜெயசீலன் என்பவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
One dead body rescued in Velachery gas bunk sinkhole accident