நான்கு மாவட்டத்தில் 126 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.! - Seithipunal
Seithipunal


நெல்லையில் மூன்று மாதத்தில் 126 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.!

திருநெல்வேலியில் நடப்பாண்டில் நூற்று இருபத்தாறு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடப்பாண்டில் இதுவரைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் முப்பத்தாறு பேரும், தென்காசி மாவட்டத்தில் இருபது பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஐம்பத்து மூன்று பேரும், குமரியில் பதினேழு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதில் குறிப்பாக, நெல்லை சரகத்தில் 779 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தைப் பினையப் பத்திரம் பெற்றும், அதனை மீறிய 19 எதிரிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் 226 வழக்குகளும், 106 கஞ்சா வழக்குகளும், 63 லாட்டரி சீட்டு வழக்குகளும், 65 சூதாட்ட தடுப்பு வழக்குகளும், 1922 மதுவிலக்கு வழக்குகளும், 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் கஞ்சா வழக்கில் மட்டும் திருநெல்வேலி சரகத்தில் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 120 குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது' என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one hundrad and twenty six peoples arrested in gangster act at four district


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->