நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து - ஒருவர் பலி..! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டக்கரம்மாள்புரம் அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்துக்குள் சிக்கிய நபர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ இடத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man died 20 more than peoples injured for accident in tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->