தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்...!!
One Nation One Ration Scheme started in Tamil Nadu
மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதனால் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெறும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இந்த திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அட்டைதாரர்களும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது தமிழக முழுவதும் பொங்கல் பரிசு தொகுக்கு திட்டம் வழங்கும் பணி முடிவடைந்ததால் இன்று முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உணவு பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன் ரேஷன் பொருட்களை அட்டையில் குறிப்பிட்ட உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க முடியும். இதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டதால் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் வசதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
One Nation One Ration Scheme started in Tamil Nadu