நெல்லை || திடீரென கவிழ்ந்த ஆட்டோ - பரிதாபமாக உயிரிழந்த 5 ஆம் வகுப்பு மாணவன்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில், அதன் சுற்றுவட்டார பகுதியான அடைய கருங்குளம், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் என்பவர் தனது ஆட்டோவில் ஏற்றி செல்வார்.

அந்த வகையில், சுந்தர் இன்று வழக்கம் போல் 11 மாணவர்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஆட்டோ திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால், விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சித்திரைநாதன் என்பவருடைய மகன் பிரதீஷ் என்ற 5ஆம் வகுப்பு மாணவன் மட்டும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 11 மாணவர்கள் ஏறி சென்ற ஆட்டோவில் 8 மாணவர்கள் பலத்த காயமடைந்ததும், ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததும் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one student died and eight student injured for accident in ambasamuthiram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->