ஆறாத காயம்.. அழியாத வடு.. ஓராண்டை கடந்த வேங்கைவயல் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ந் தேதி குழாய்களில் வந்த தண்ணீரை குடித்த மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் மேல்நிலை நீர் தொட்டியில் ஏறிப்பார்த்த பொது தண்ணீரில் மனித கழிவு கலக்க பட்டது தெரியவந்தது.

இந்த விவகாரம் இந்திய அளவில் எதிரொலித்ததால் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரத்தை வைத்து வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராம மக்களுக்கு இடையே  பிரசச்னை உருவாகும் சூழல் நிலவியதால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி விசாரணை நடத்தியபோது போது சிலர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பாதிக்கப்பட்ட எங்களையே விசாரணைக்கு அழைக்கிறார்கள் என வேங்கைவயல் மக்கள் குற்றம்சாட்டினர். 


இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 25 ந் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. அடுத்த நாளே விசாரணை தொடங்கி 220 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்ட நிலையில் சாட்சிகள் இல்லாததால் அறிவியல் பூர்வமாகவே விசாரிக்க வேண்டும் என மனித கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் பெண் உட்பட சிலரது கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் சம்பவம் நடந்த அன்று வேங்கைவயல் இளைஞர்கள் உட்பட பலர் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் நடந்த உரையாடலை வைத்து ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணாவை தனிநபர் ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு. அதனை தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பலரது பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்படி தற்போதுவரை 31 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 


அதன் பிறகு இந்த வழக்கு என்ன ஆனது எந்த தெரியாமல் போனது வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்ற குரல் மட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது. டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகும் கூட உண்மையான குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் சிபிசிஐடி போலீசார் உண்மை கண்டறியும் சோதனைக்காக நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடை பெற்று இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் இதுவரை ஒருவரைக் கூட பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனை. வேங்கைவயல் விவகாரத்தை அரசியலுக்காக மெத்தனமாக நடவடிக்கை எடுக்கப்படுகிதோ? என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். வருடம் கடந்த நிலையில் வேங்கைவயல் மக்களுக்கு இந்த சம்பவம் ஆறாத காயமாகவே மனதில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one yearof vangaivyal incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->