இனி ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு!
Online Rummy Tutucorin murder case selvaperunthakai statement
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று, காங்கிரஸ் சட்டபேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?
அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.

ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்" என்று கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
Online Rummy Tutucorin murder case selvaperunthakai statement