சென்னை ஆன்லைன் ட்ரேடிங் மோசடி: பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய புள்ளி கைது!
Online Trading Scam one arrest chennai
சென்னை பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த ஶ்ரீபிரியா என்ற பள்ளி ஆசிரியை, ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.12 லட்சம் இழந்துள்ளார்.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சிவகுமார், ஶ்ரீபிரியாவின் நண்பர் மூலம் அறிமுகமாகி, வடபழனியில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று சிவகுமார் ஆசை வார்த்தை கூறியதால், ஶ்ரீபிரியா 2019-ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.12 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், சிவகுமார் உறுதியளித்தபடி லாபம் கொடுக்கவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. பின்னர், சிவகுமார் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஶ்ரீபிரியா, 2020-ம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிவகுமார் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. நீதிமன்றமும் சிவகுமாரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிவகுமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Online Trading Scam one arrest chennai