ஜெயலலிதா மரண வழக்கில் நாளை ஓ.பி.எஸ். ஆஜர்.!
OPS appearing in enquiry commission
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராக உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த பொழுது சசிகலா தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக கூறி ஒ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை நடத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையின் பேரில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், 90 விழுக்காடு விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார்.
அப்போது தனது தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளார். அதே சமயம் சசிகலா உறவினர் இளவரசி நாளை காலை 10 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
OPS appearing in enquiry commission