வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - கொந்தளிக்கும் ஓ.பன்னீர்செல்வம்! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல், செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சென்னை தீவுத்தடல் பகுதியில் கார் ரேஸ் நடக்க உள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக செய்து வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆரம்பம் முதலே இதற்கு கடுமையான எதிர்ப்பை, கண்டனத்தை தெரிவித்து வருகிறார். மேலும் அதிமுக தரப்பில் இந்த கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இந்த கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து, தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

இந்த நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இந்த கார் பந்தயத்திற்கு கடுமையான தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகி உள்ளனர்.

ஆனால், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று  தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Car racing dmk O Panneerselvam


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Condemn to TNGovt for Car Race


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->