#BigBreaking:: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்..!!
OPS mother Palaniammal passes away
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நல குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு 95 வயதாகுவதால் வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் சீரானதை தொடர்ந்து தேனியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தனது தாயாரை பார்க்க தேனீ விரைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளின் மறைவு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
OPS mother Palaniammal passes away