ரொம்ப வேதனையை இருக்குங்க! தமிழக அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 8932 ஆக நிர்ணயம் செய்து இருப்பது மிகவும் குறைவு  என்று முன்னாள் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.

மேலும், 2024ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக உயர்ந்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 34 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதன் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க.வின் வாக்குறுதியில் பத்து விழுக்காடு கூட நிறைவேற்றப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது.

2024 ஆம் ஆண்டு தொகுதி-4 (Group IV) போட்டித் தேர்வினை எழுதிவிட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்கால இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றும் வண்ணமும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், தொகுதி-4-ன்கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS say About Group4 Tnpsc


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->