ஒ.பி.எஸ்.சும் நானும் இணைந்து செயல்படுவோம்..! - டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.மு.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது மனைவியுடன் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், எனக்கு 60 வயது நிறைவடைந்ததை தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் ஆசியை பெறுவதற்காக பூஜை செய்துள்ளேன். 

வருகின்ற மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதியை எட்டிய பிறகு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிப்பேன். நானும் ஓ.பி.எஸ்சும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கனவே முடிவெடுத்துள்ளோம். 

எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS together work TTV Dhinakaran speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->