நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட், சென்னையில் 336% மழை பெய்துள்ளது !! - Seithipunal
Seithipunal


இந்த ஜூன் மாதத்தில் இதுவரையில் சென்னை மாநகரில் இதுவரை 336% அதிக மழை பதிவாகியுள்ளது. தற்போது 198.1 மிமீ சராசரி மழையளவு, ஆனால் ஒரு மாதத்தின் சராசரி மழையளவு 45.4 மி.மீ மட்டுமே. 

இதுமட்டுமில்லாமல் மேலும் சில நாட்களுக்கு தாமதமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1996ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் அதிகபட்சமாக 697.5 மிமீ மழை பெய்தது பதிவாகி உள்ளது

தற்போது கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இன்று நீலகிரி மற்றும் கோவையில் உள்ள தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் , கன்னியாகுமரி மற்றும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும். வருகின்ற ஜூன் 25ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை மற்றும் மேகமூட்டமான வானிலை வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், தமிழகத்தில் ஒரு சில உள் மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 26 வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலையை அனுபவிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மதுரையில் நேற்று சராசரி வெப்பநிலையை விட 1.6 டிகிரி அதிகமாக 39.1 டிகிரி பதிவாகியுள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் புழலில் 5 சென்டிமீட்டர் மழையும், கோவையில் சின்னக்களார், வால்பாறை, செங்கல்பட்டில் தாம்பரம், சேலம் ஏற்காடு, கன்னியாகுமரியில் களியலில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orange alert for Nilgiris 336 percentage rainfall in Chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->