விபத்தில் மூளைசாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்:
Organ donation brain dead teacher
தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்க பெருமாள். இவரது மகன் சதீஷ் (வயது 33). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதனால் நிலை தடுமாறிய சதீஷ் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் வழங்க முடிவு செய்து இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக வழங்கினர்.
சதீஷின் இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்து வருகிறது.
English Summary
Organ donation brain dead teacher