கட்டுப்பாட்டை இழந்த கார்! தந்தை மகள் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


நடைபயணம் மேற்கொண்டிருந்த தந்தை மகள் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையில் உள்ள முகமது ஷா புரம் பகுதியை சேர்ந்தவர்கள் துளசி நாதன் விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சஷ்டிகா என்ற ஆறு வயது மகள் உள்ளார். 

இந்நிலையில் இன்று காலையில் நடை பயணம் மேற்கொண்டிருந்த துளசி நாதனுடன் சஷ்டி கவசம் சென்று கொண்டிருந்தார். 

திருமங்கலம் அருகே உள்ள குதிரை சவாரி குளம் விளக்கு பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த போது சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் இருவரின் மீது மோதியது. 

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் துளசி நாதனின் மகள் சஷ்டிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் துளசி நாதனை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து துளசி நாதனை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நடைப்பயணம் மேற்கொண்டிருந்த தந்தை மகள் இருவரும் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Out of control car Father and daughter are dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->